எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும், சமூக நீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்றைய தினம் திறந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றனர்.
குறித்த இரு அமைப்புக்களின் சார்பில் இன்றைய தினம் மாலை யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரன் கலந்துகொண்டு குறித்த அறிவிப்பினை விடுத்திருந்துள்ளார்.
மேலும் மஹிந்த ஆட்சியில் தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவு அழிவுகளை சந்தித்ததாகவும் அதனை மனதில் கொண்டு தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும், அடக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் கிடைத்திருக்கும் ஜனநாயக சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.