யாழ். குருநகர் கடல் பகுதியில் விளையாடுவதற்கு சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக நேற்றையதினம் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் வசிக்கும் றூபன் அன்டனிபேட் கீர்த்தனன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்தவனாவான்.
குருநகர் கடற்பரப்பில் நேற்றையதினம் காலை 11 மணியளவில் குறித்த சிறுவனும் அவனது தம்பியும் கடலுக்குள் 25 மீற்றர்
தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் விளையாடுவதற்கு சென்றுள்ளனர்.
கடலுக்குள் 2 அடி ஆழ நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்த காரணத்தால் கடல் நீர் மட்டம் 5 அடியாக அத