அப்போது இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றிய இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதியை பேட்டி எடுத்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை, எப்படி நீங்கள் இறுதியாக பிரி்ட்டிஷ் விமானப்படையின் விமானியாக தெரிவு செய்யப்பட்டீர்கள் என்று கூறுங்கள்?
பதில் – நான் சிறுவனாக இருக்கும் போது முதலில் ஆனந்த கல்லூரியில் படித்தேன். பின்னர் மானிப்பாய் மற்றும் யாழ் இந்து கல்லூரிகளில் எனது கல்வியை தொடர்ந்தேன். எனது 20 வயதின் ஆரம்பத்தில் நான் எனது வாழ்க்கை அர்த்தமுள்ள எதனையும் செய்யவில்லை. இதனால் எனது பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினர்.
எனக்கு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், நான் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரச விமானப்படையில் இணைந்தேன்.
1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச விமானப்படைக்கு இலங்கையை சேர்ந்த 18 பேர் தெரிவு செய்யப்பட்டு, பயிற்சிக்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனது பெயரும் சீ.கே. பதி என மாறியது. முதலில் இங்கிலாந்தின் ஸ்காப்ரோ, அதன் பிறகு மேலதிக பயிற்சிகளுக்காக கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். நான் மட்டுமே அந்த குழுவில் இருந்த ஒரே தமிழன்.
கனடாவில் மனிடோபா நீபாவாவில் எமக்கு முதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. எனது பயிற்சியின் போது ஒரு முறை கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் எனது விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போனது. அது கருமையான இருள் நான் வெற்றிகரமான விமானத்தை தரையிறக்கினேன் எனது பயிற்சியாளர் என்னை பாராட்டினார்.
எமக்கான பயிற்சிகள் மனிடோபாவின் கார்பரி பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது. நான் விமானம் ஓட்டும் பரீட்சையில் தோற்றினேன். பரீட்சையில் ஒரு புள்ளியில் தோல்வியடைந்தேன். ஆனால், நான் பறப்பதை கைவிட விரும்பவில்லை. வயிற்று உபாதை காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன்.
பரீட்சையில் தோல்வியடைந்தது குறித்து கட்டளை அதிகாரி கேள்வி எழுப்பினார், மீண்டும் பரீட்சைக்கு தோற்றிய பின்னர், பயிற்சிகளுக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டேன். இப்படி சந்தர்ப்பத்தை எவருக்கும் வழங்க மாட்டார்கள். அங்கு எவரும் பெறாத அதிக்கூடிய புள்ளிகளை நான் பரீட்சையில் பெற்றேன். இந்த செய்தி இலங்கை பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.
பிரிட்டிஷ் அரச விமானப்படை விமானியாக உங்கள் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?
எனது பரீட்சைகளின் பின்னர் இரண்டாம் உலக போரில் போர் விமான விமானியாக நான் இங்கிலாந்து திரும்பினேன். நான் ஓட்டிய விமானம் உலக போரில் பல தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. பிரான்ஸ் கடற்பகுதியில் வைத்து ஜேர்மனிய நீர்மூழ்கி கப்பல் மீது இந்த விமானத்தில் இருந்து குண்டு வீசப்பட்டது எனக்கு நினைவிருக்கின்றது. போர் முடிந்தவுடன் வடக்கு இங்கிலாந்தில் கரையோர பாதுகாப்பு படையில் பணியில் அமர்த்தப்பட்டேன்.
இதனையடுத்து இலங்கை திரும்பிய நான் ஏயார் இந்தியாவில் இணைந்து 27 வருடங்கள் பணியாற்றினேன். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் போர் காலத்தில் பணியாற்றியதற்காக 1944 ஆம் ஆண்டு எனக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
நீங்கள் தலையெழுத்தை நம்புவீர்களா? என கேப்டன் கனகசபாபதி பார்த்திபனிடம் கேட்கிறார்.
ஓரளவுக்கு நீங்கள் எப்படியானவர்?
நான் தலையெழுத்தை முழுமையாக நம்புகிறேன் ஏன் தெரியுமா. பிரிட்டிஷ் அரச விமானப்படையில் இந்தியாவை சேர்நத விஜேந்திர குமார் என்ற எனக்கு நெருங்கிய நண்பர் இருந்தார். பயிற்சிகளின் போது நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அவர் டோன்காஸ்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.
பயிற்சிகள் முடிந்து நான் லண்டன் திரும்பிய போது, விஜேந்திர குமார், போரில் ஈடுபடும் விமானங்களை நிரல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
போர் நடைபெற்ற போது அவர் பயணித்த விமானம் உட்பட அனைத்து விமானங்களை ஜேர்மனி சுட்டு வீழ்த்தியது. நான் முதல் முறையாக விமான ஒட்டும் பரீட்சையில் வெற்றிப்பெற்றிருந்தேன். இலங்கையில் இருந்து 18 பேர் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் இணைத்து கொள்ளப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் விமானி பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களின் இரண்டு பேர் பரீட்சையில் தேர்ச்சி பெறவில்லை என்பதுடன் பயிற்சிகளின் போது இறந்து போயினர். மேலும் மூன்று ஜேர்மனியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இறந்தனர். ஒருவன் மாத்திரமே திரும்பி வந்து உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இதற்கு எப்போதும் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.
அந்த காலத்தில் பிரித்தானியாவின் கீழ் பணியாற்றியது எப்படி இருந்தது?. நீங்கள் இலங்கையர் என்பதால், வித்தியாசமாக கவனித்தார்களா?
எப்போதும் அல்ல. நன்றாக மரியாதை கொடுத்து எம்மை கவனித்தனர். குறிப்பாக கனேடிய மக்கள் உலகில் மிக சிறந்த மக்கள். இறுதி நாட்கள் அனைத்து உங்களை சார்ந்தது. உலகம் என்பது கண்ணாடி போன்றது. நீங்கள் சிரிக்கும் போது அது சிரிக்கும். நீங்கள் முகத்தை சுளித்தால், அதுவும் சுளிக்கும். இவை அனைத்தும் பிரதிபலிப்பு.
உங்களது மிகப்பெரிய சாதனை எனது என கருதுகிறீர்கள். நீண்டகாலமாக விமானியாக இருந்த உங்களுக்கு எது மிகவும் மறக்க முடியாத தருணம்?
அந்த நேரத்தில ஜெட் விமானத்தில் பறந்த முதல் இலங்கையன் நான். நான் இணைந்து கொண்ட போது எமது பயிற்சிகளுக்காக அமெரிக்க போயிங் விமானங்களை அனுப்பி வைத்தது. போயிங் விமானங்களில் சிறந்த விமானிகள் எனக்கு பயிற்சியளித்தனர். எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இது எனது மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன்.
இந்திய – சீன போரின் போது இந்திய துருப்புகளுடன் தளங்களுக்கு பயணித்துள்ளேன். அத்துடன் காஷ்மீர் இணைப்பு தொடர்பான விடயம் குறித்து சேக் அப்துல்லாவை சந்திக்க இந்திய பிரதமர் நேருவுடன் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு பயணித்துள்ளேன்.
நீங்கள் பிரதமர் நேருடன் பேசினீர்களா? அவர் என்ன கூறினார்?
பிரதமர் நேரு விமானிகள் அமரும் இடத்தில் என்னுடன் அமர்ந்திருந்தார். நாங்கள் பொதுவான காலநிலை பற்றி பேசினோம்.
எயார் இந்தியாவில் பணியாற்றிய பின்னர், நீங்கள் எங்கு சென்றீர்கள்?.
நான் ஓய்வுபெற்ற பின்னர், எயார் சிலோனில் பணிப்புரிந்தேன். அத்துடன் திருகோணமலையில் ஹொட்டல் ஒன்றையும் ஆரம்பித்தேன். அதில் இன்னும் நிலையாக இருக்கின்றேன். எனது இரண்டு மகன்மாருக்கு நான் பயிற்சிகளை வழங்கினேன். அவர்கள் சிங்கப்பூர் எயார்லைன்ஸில் இணைந்து கொண்டதுடன் கேப்டன்களாக உயர்ந்தனர். எனது ஒரு மகன் ஒய்வுபெற்றுள்ளார். இவர் ஹொட்டலை பொறுப்பேற்று நடத்துகிறார். இறுதியில் நான் அவுஸ்திரேலியாவுக்கு சென்றேன். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் சேவையாற்றியதற்காக எனக்கு அங்கு கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.
ஏன் நீங்கள் ஹொட்டல் நடத்த விரும்புகிறீர்கள்?.
எனக்கு வீடு இருக்கவில்லை. குறிப்பாக எனது பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிய பின்னர், எனது தாய் நாட்டில் எனக்கு ஏதாவது இருக்க வேண்டும் என்று கருதினேன். திருகோணமலை நிலாவெளியில் நான் ஒரு காணியை வாங்கினேன். அது கடலும் காடுமாக இருந்தது. அங்கு ஹொட்டலை நிர்மாணித்தேன். அந்த ஹொட்டலுக்கு புளோரினா என்று எனது மகளின் பெயரை சூட்டினேன்.
சிவில் போர் நடைபெற்ற போது இராணுவத்தினர் கைப்பற்றி கொண்டதால், எனது ஆடம்பர வீட்டில் நான் சரியான மகிழ்ச்சியை அனுபவிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் இந்த ஹொட்டலும் பாதிக்கப்பட்டது. ஹொட்டல் மீண்டும் எமது கைக்கு கிடைத்த பின்னர், அதன் பெயரை பாம் பீச் ஹொட்டல் என்று மாற்றினோம். 20 வருடங்களுக்கு மேலான காலத்திற்கு பின்னர் இங்கு திரும்பி வந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
யாழ்ப்பாணம் உடுவிலில் உள்ள வைரவர் கோயிலுடன் நீங்கள் மிகவும் நெருங்கி பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அந்த கோயிலுக்கும் அப்படி என்ன முக்கியத்துவம் பெறுகிறது?
எனக்கு 8 வயதாக இருக்கும் போது கோயிலுக்கு வலது புறமாக நான் நடந்து சென்றேன். அப்போது வெளியில் இருந்து வந்த வெளிச்சத்தால் சூழப்பட்டேன். அந்த வெளிச்சம் நான் சிறுவனாக இருந்த போது விபரிக்க முடியாத காரணத்திற்கான உறுதியை எனக்கு கொடுத்தது. அது எனது வாழ்க்கையில் ஏதோ ஒரு சிறந்ததை செய்துள்ளது. அதுவே அந்த கோயில் எனது அன்புக்குரியதாக மாறியுள்ளது.
நான் எப்போதும் வாழ்க்கையின் தெளிவாக பக்கத்தை பார்ப்பவன். நான் அங்கீகாரத்தை நம்பவில்லை. மனிதகுலத்திற்கும் ஆலயத்திற்குமான சேவையை மட்டுமே நான் நம்புகிறேன். நான் வேறு எதனையும் விட மதிப்பையும் நேர்மையையும் வணங்குகிறேன். நான் சிறுவனாக பட்டங்களை பறக்கவிட்ட பின்னர், இந்த உலகில் மிகப்பெரிய விமானங்களை பறக்கவிட்டேன். எனது வாழ்க்கை மிகவும் சாகசம் நிறைந்தது. கனடாவில் எனது பாகம் என்னை மனிதனாக்கியது. ஒரு பிரச்சினையை உடனடியாக தீர்த்து விட்டால், எதிர்காலத்தில் அதிக நேரத்தை சேமிக்கலாம் என்ற பழமொழியை நான் நம்புகிறேன். இதுதான் எனது வாழ்க்கை கதை. மீண்டும் எனது வீட்டுக்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களால் தற்போதும் விமானங்ளை ஒட்டிச் செல்ல முடியுமா?.
தற்போது நான் கார் ஒட்டுகிறேன். கட்டாயம் என்னால், தற்போதும் விமானத்தை ஒட்ட முடியும். அதில் சந்தேகம் இல்லை.