கூலி வேலையில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் மீது வீட்டின் சீமெந்து பிளாற் உடைந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முற்பகல் 9 மணியளவில் தெல்லிப்பழை பட்டிக்கடவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை தந்தை செல்வாபுரத்தைச் சேர்ந்த இராசன் – மயூரன் (வயது-27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்றினை முற்றாக இடிக்கும் வேலையில் மேற்படி நபர் உட்பட்ட 5 பேர் கொண்ட கூலித்தொழிலாளர்கள் நேற்றுக்காலை ஈடுபட்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில் குறித்த நபரின் தலை மீது சீமெந்து பிளாற் உடைந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரது சடலத்தை காங்கேசன்துறை பொலிஸார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.