ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் அராஜக, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும், ஜனநாயகத் துக்குத் திரும்ப வேண்
டும். அதற்காக பொது வேட்பாளர் மைத்திரி யை ஜனாதிபதியாக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பு மேலோங்கி
வருகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்த
மருது ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களின்போது அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
செத்தமாட்டில் இருந்து உண்ணி கழர்வதுபோன்று மகிந்த அரசாங்கத்தைவிட்டு அனைவரும் வெளியெறிவருகின்றனர். இந்த அராஜக ஆட்சிக்கு விரைவில் முடிவுகட்டவேண்டும் என்றார்.