யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபிக்கு முன்பாக வரணி இயற்றாலையைச் சேர்ந்த நகேந்திரன் துசாந்த் என்பவரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள், மற்றும் அவரை அவமதிக்கும் செயலை நிறுத்தமாறு கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வடமாகாண முதல்வரின் செயலாளர் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியிருந்த நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோடு அந்நபர் தொலைபேசியில் உடையாட வழிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் தனது கோரிக்கைகளைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சி .வி விக்னேஸ்வரன் ஜயா அவர்களை அவமதிக்கும் செயல்களை நிறுத்தக் கோரியும் அவரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள் என்று கோரியும் அவரை அவதூறு செய்யும் சகல செயல்களையும் நிறுத்தி உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். நல்லுர் சங்கிலியன் அரண்மனை மிகவும் சேதமடை