ஏர் ஏசியா விமானத்தின் மிகப்பெரிய பாகங்கள் கண்டெடுப்பு : விமானம் விரைவில் மீட்கப்படும்!

0
225
AP_AIRASIA212ஜாவா கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் மிகப்பெரிய பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
ஒரு வார காலமாக நடைபெறும் தேடுதல் வேட்டையில், விமானத்தின் உடைந்த மிகப்பெரிய பாகங்கள் கண்டுக்கப்பட்டுள்ளது. விமானத்தின் முக்கிய பாகங்களை மீட்புக் குழுவினர் விரைவில் கண்டறிவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டன. விமானத்தின் சிதறிய பாகங்களும், உயிரிழந்தவர்களின் உடல்களும் கடலில் 5 கி.மீ. சுற்றளவுக்குப் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், அந்தப் பகுதியில் நவீன தேடுதல் கருவிகளின் உதவியுடன் விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடி வருகின்றனர். விபத்தின்போது பயணிகள் “சீட் பெல்ட் அணிந்திருக்கலாம் எனவும், அதனால் பெரும்பாலான பயணிகளின் உடல்கள் இருக்கையில் பிணைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here