மௌரிசியசில் இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து நடாத்திய காலாச்சார பொங்கு தமிழ் !

0
281

மௌரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் அங்கத்துவ அமைப்பான மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் மௌரிசியசில் இருக்கும் அனைத்து  தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து  நடாத்திய  தமிழர்  திருநாள் தை பொங்கலை யொட்டி  மலேசியா சிங்கப்பூர் தமிழ் நாடு ஆகிய இடங்களில் இருந்து வந்த நூற்றுக்கும்  மேற்பட்ட கலைஞர்கள்  பங்கு பற்றிய தமிழ் கலை காலாச்சார பொங்கு தமிழ் நிகழ்வில்  அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் பிரான்சில் இருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தமிழ் மக்களின் பூர்வீகம் கலை கலாச்சாரத்தை மையப்படுத்தி நிகழ்சிகள் நடைபெற்றன.1அத்தோடு 1985 ஆண்டு முதல் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் மொரிசியஸ் நாட்டின் எதிர்கட்சி தலைவரையும் திரு திருச்சோதி  அவர்கள்  சந்தித்து 45 நிமிடங்கள் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைகளை பற்றி எடுத்துரைக்க வாய்ப்பு கிடைத்திருந்தது , இவ் முக்கிய சந்திப்பில் வடமாகாண சபை இன அழிப்பு தொடர்பான தீர்மானத்தையும் , தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும்  ,வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 40 ஆண்டு , மக்கள் ஆணையின் முக்கியத்துவத்தை  விளக்கியதோடு  , சிறிலங்கா அரசு முன்னெடுக்கும்  யாப்பு திருத்தம் விடையத்தின்  பின்னணி தந்திரத்தையும்   எடுத்துரைத்தார் . 3திருவள்ளுவர் ஆண்டு 2047 யை தமிழர் புத்தாண்டு நாளாக நினைவு கூர்ந்து  15 ஜனவரி 2016 (தை 1) மௌரிசியசில் அமைக்கப்பட்டுள்ள மௌரிசியஸ் தமிழர்  நினைவு தூபி முன்பும் ஈழத் தமிழருக்கான நினைவு தூபி ஆகியவற்றில் மலர் வணக்கம் செய்யப்பட்டு  16 ஜனவரி 2016 மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு  திருவள்ளுவர் நாள் நிகழ்வுகளும் வளாகத்தில்  அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலை வணக்க நிகழ்வும் தமிழர் புத்தாண்டு 2047 யை நினைவு கூறுவதோடு புலம்பெயர் உலகத் தமிழரோடு தமது உறவை வலுப்படுத்தும்  முகமாக மரநாட்டு நிகழ்வும் நடை பெற்றது.5

இந்த நிகழ்வுக்கு மௌரிசியசில் இருக்கும் அனைத்து தமிழ் கட்டமைப்புகளும் கலந்து கொண்டதுடன் மௌரிசியஸ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் திரு சுவாமிநாதன், கல்வித்துறை அமைச்சர் திருமதி லீலாவதி, இந்திய தூதகரத்தின் உப உயர்ஸ்தானிகர் திரு சர்மா மற்றும் நகர பிதாக்கள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் வெளிவிவகாரத்துறை  தொடர்பாளர் திரு திருச்சோதி அவர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்.8


இவ்நிகழ்வை ஆரம்பித்து வரவேற்புரையை   மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பின் காரியதரிசி திரு செங்கண், திருவள்ளுவர் பற்றி பேசியதோடு தமிழ் மக்கள் தாம் அடையாளங்களாய் பேணவேண்டிய முக்கியத்துவத்தை அதுவும் இந்த உலகமயமாகத்தில் தமிழர்கள் தமது அடையாளத்தை கலை கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். 

அதன்பின் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பின் தலைவர் திரு மாதேவன் சுபன்  எல்லோரையும் வரவேற்றதோடு ஈழத்தமிழர்களோடு  அவர்களின் விடுதலை உணர்வுகளுடன்  மௌரிசியஸ் வாழ் தமிழர்கள் என்றும் இணைந்தே இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் அடையாளமே இந்த மர நாட்டு நிகழ்வும் அதுவும் திருவள்ளுவர் நாளில் இந்த நிகழ்வு  நடைபெறுவதை இட்டு தாம் மகிழ்வதாக கூறினார்.7

அதன் பின் திருவள்ளுவர் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் வெளிவிவகாரத்துறை தொடர்பாளர் திரு திருச்சோதி அவர்களால்  மௌரிசியஸ் நாட்டில் பூர்வீக  மரமாகிய Trochetia Botaniana என்ற மரக்கன்று நடப்பட்டது. 

இந்த மர நடுகையின் போது அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மண்ணிட்டு அதற்கு  நீர் ஊற்றி  ஒற்றுமையை  வலுப்படுத்துவோம் என்று சத்திய பிரமாணத்துடன் நிகழ்வு முடிவடைத்தது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை  ​

2  4  6   9 10 11 12

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here