பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நுழைந்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தலிபான்களின் இந்த கொலைவெறி தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
3000 மாணவர்கள் பயின்று வரும் இந்த பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளுக்காக இன்று மேலும் 600 மாணவர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.
இதனிடையே ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பல்கலைக்கழகத்தினை கொண்டுவந்த பின்னர் உள்ளே சிக்கியிருந்த மாணவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல அதிக வாசல்கள் இருப்பதால் தீவிரவாதிகள் எளிதில் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகளில் 4 பேர் மட்டுமே இதுவரை கொல்லப்பட்டுள்ளதால் மேலும் சிலர் வளாகத்தின் உள்ளே பதுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.