ஏர் ஏசியா விமான விபத்தில் பலியான நபர்களில் 30 பேரின் உடல்களை தற்போது மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து மீட்பு குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் முதற்கட்டமாக மொத்தம் 52 பேரின் சடலங்களை ஜாவா கடலில் இருந்து மீட்டுள்ளனர். இதன் பின் வானிலை சற்று மோசமாக இருந்ததால் மீட்பு பணி சற்று தொய்வு அடைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணியில் 30 பேரின் உடல்களை மீட்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதில் ஐந்து பேரின் உடல்கள் விமான இருக்கையில், ‘சீட் பெல்ட்’ அணிந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன உபகரணங்கள் மூலம் 5 சதுர கிலோ மீற்றர் சுற்றளவில், கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமான பாகங்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.