தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மகரத்திருநாளாக தமிழர்களால தமிழீழம்,தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
6வது வருடமாக இளையோர் அமைப்பினரால் 16/01/2016 சனிக்கிழமை காலை 1100 மணி தொடக்கம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பெற்றது. தாயக முறைப்படி முற்றத்தில் கோலமிட்டு முதலில் பொங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்களும் அவர்களின் பெற்றோர்களும் உறவுகளும் கூடிநின்று மண்பானையில் அரிசியிட்டு பொங்கலை ஆரம்பித்து வைத்தனர். சிறிது நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் ஒலி எழுப்பி பொங்கலின் உற்சாகத்தை கொண்டாடினர். அதன் பின்பு சிற்றுண்டி வகைகளும் பொங்கலும் அனைத்து உறவுகளுக்கும் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் இளையோர்களால் கும்மி பாட்டிற்கு கும்மி நடனமுமாடி பொதுமக்களையும் சிறுவர்களையும் கவர்ந்தார்கள்.