கடமையை செய்ய முனையும் தமிழரை கொச்சைப்படுத்தும் அரசு: மனோ கணேசன் தெரிவிப்பு!

0
591


mano-ganeshan-2ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து நமது  தேசிய கடமையை நாம் செய்வோம் என வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் முன் வந்தால் அதை இந்த மகிந்த அரசு கொச்சைப்படுத்துகிறது.

அதாவது, நாம் இந்நாட்டவர், இது ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சி.

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அந்த கட்சி தனது நிலைப்பாட்டை இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு, ஆளும் அரசுக்கு எதிரான, பொது எதிரணி க்கு ஆதரவான அறிவிப்பு என்றவுடன் இந்த அரசுக்கு கோபம், ஆற்றாமை, ஆத்தி ரம் வந்துவிட்டது.

ஒருவேளை கூட்டமைப் பின் ஆதரவு அரசுக்கு கிடைத்து இருந்தால், இந்த கோபம் மறைந்து கூட்டமைப்பின் மீது காதல் பிறந்திருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஐதேக தலைமைக்குழு தவிசாளர்  கரு ஜய சூரிய, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த தேர்தல், சிங்கள நாட்டு தேர்தல்,  இதில் பங்கு பற்றி வாக்களிக்கும் அவசியம் எமக்கு கிடையாது என்று ஒருகாலத்தில் செயற்பட்டு  வந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும், அவர்களது தலைமைகளும், இன்று இந்த தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் தாம் இந்த நாட்டு குடி மக்கள் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

இது ஒரு வரவேற்ககூடிய மாற்றம். இந்த நாட்டை நேசிக்கும் எவரும் இந்த மாற்ற த்தை வரவேற்க வேண்டும்.

ஆனால், இந்த மகிந்த அரசு இதை புரி ந்துகொள்ள  மறுக்கின்றது. மகிந்த தனது அமைச்சரவை சகாக்கள் மூலம், கூட்டமை ப்பின் அறிவிப்பை திரித்து கூறி துர்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு தருகிறது என்பதைவிட, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இல ங்கை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்த லில் பங்கு பற்றுகிறார்கள் என்பது முக்கியமானதாகும்.

ஒரே நாடு என்று தமிழர் சொன் னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது. தேர்தலில் பங்கு பற்றி வாக்களிக்கும் தமிழ் மக்களுக்கு தாங்கள் விரும்பிய கட்சிக்கு, சின்னத்துக்கு வாக்களிக்கும்  உரிமை உண்டு.

இதை எவரும் தட்டி பறிக்க   முடியாது. அதேபோல் அந்த மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சிக்கு தமது மக்கள் தொடர்பில்  வழிகாட்டல்  செய்ய பூரண உரிமை உண்டு.  இதையும் எவரும் தட்டி பறிக்க முடியாது என அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here