சிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
135

ddd (1)கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 16ஆம் திகதி காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் இவ்விபத்து 15ஆம் திகதி   இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பட்டல்கலை தோட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கென சென்ற 8 வயது சிறுவனும் அவரின் சகோதரனும் பட்டல்கலை பகுதியின் பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வந்த முச்சக்கரவண்டி வீதியில் சென்ற இவர்களின் மீது மோதி முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சகோதரர்கள் அயலவர்களினால் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் இவர்களின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டதனால் கண்டி வைத்தியசாலைக்கு உடனடி மாற்றம் செய்யப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். எனினும் அவருடைய சகோதரர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

எனவே குறித்த சிறுவனை வைத்தியசலைக்கு கொண்டு சென்றபோது வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டி சாரதி ஆகியோர் அசமந்த போக்கில் இருந்தமையே சிறுவன் உயிர்ழந்தமைக்கு காரணம் என கோறி போடைஸ் தோட்டமக்கள் இன்று பிற்பகல் ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் பட்ல்கல சந்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இது போன்ற அசமந்த போக்கில் கடமையில் ஈடுபடும் வைத்தியர்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகளுக்கு சுகாதார அமைச்சி தகுந்த நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்

இதேவேளை சிறுவனின் சடலம் ஆர்பாட்டத்தில் பேரணியாக கொண்டுவரபட்டு ஹட்டன் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பில் அடக்கம் செய்யபட்டமை குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here