உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்!

0
4

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, உக்ரைன் உடனான போர் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டாக, உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையே போர் நீடித்து வருகிறது. தற்போது இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் மே மாதம் 9ம் தேதி தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் உக்ரைனில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். போர்நிறுத்தம் மே 8ம் தேதி தொடங்கி மே 10ம் தேதி வரை 72 மணி நேரம் நீடிக்கும். இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது.

இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் புடின் ஈஸ்டர் தினத்திற்கு போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here