
கனடாவின் வன்கூவரில் நடைபெற்ற ஒரு தெரு விழாவில் மக்கள் மீது ஓட்டுநர் ஒருவர் மகிழுந்தைச் செலுத்தி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர் என காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை இரவு நடந்த லாபு லாபு விழாவில் கூட்டத்தினரிடையே ஒருவர் மகிழுந்தைச் ஓட்டிச் சென்றதில் ஒன்பது பேர் இறந்துள்ளனர் என்பதை இப்போதைக்கு எங்களால் உறுதிப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த சம்பவம் பயங்கரவாதச் செயல் அல்ல என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெற்கு வான்கூவரில் உள்ள கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெரு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாக வான்கூவர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு தெரு விழாவில் பலரை கொன்று மற்றவர்களைக் காயப்படுத்திய சம்பவம் குறித்து விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கருப்பு நிற SUV மகிழுதை ஓட்டி வந்த ஒருவர் கூட்டத்திற்குள் புகுந்து மக்கள் மீது மோதியதாக சாட்டிகள் கூறியுள்ளன.
