புனித பாப்பரசருக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் அஞ்சலி!

0
17

புனித பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்றுமுன்தினம் உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்கள் இடம்பெற்றுவருகிறது. இந்நிலையில் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர்கள் தமது தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் வைத்து புனித பாப்பரசரின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலிகளை செலுத்தினர். மேலும் அவர்கள் கூறுகையில் பாப்பரசரின் மறைவையொட்டி துயர அடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மக்களின் துயரத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here