
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த தியாகி அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் 37வது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அக் வணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.


