நாவாந்துறையில் இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதனால் அங்கு மேலும் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் நாவாந்துறை சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் 3 கடைகள் சேதமாக்கப் பட்டுள்ளதோடு சிலர் காயமடைந்து முள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு பிறப்பான நேற்று முன்தினம் இரவு நாவாந்துறை சென்.மேரிஸ் மற்றும் சென்.நீக் கிலஸ் ஆகிய இரு பிரிவினர்களிடையே இம் மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலினால் அப்பகுதி எங்கும் கண்ணாடி போத்தல்களினால் நிறைந்து காணப்படுகின்றன.
மோதலில் ஈடுபட்டவர்கள் போத் தல்களினால் வீசித்தாக்குதல் மேற் கொண்டதாகவும் தாம் அவ்விடத்திற்கு விரைந்ததும் மோதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாவாந்துறையில் ஏற்பட்ட அசா தாரண சூழ்நிலையையடுத்த அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் நாவாந்துறையில் சென்.மேரிஸ், சென்.நீக்கிலஸ் இடையே ஏற்பட்ட மோதலால் பலர் காயமடைந்ததோடு பல்லாயிரக்கணக்கான சொத்து மதிப்புடைய பொருட்களும் சேதமாக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் பொலிஸாரின் தலையீட்டையடுத்து இருதரப்பும் சமாதானமாக சென்றிருந்தனர்.
இம்மோதலின் தொடர்ச்சியாகவே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இலங்கை இராணுவம் இன்றிரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். நாவாந்துறையினில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்தவென கூறி படையினர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர்.
இத்துப்பாக்கி சூட்டினில் அதே இடத்தை சேர்ந்தவரான சந்திரகுமார் சண்சிவன்(வயது 30) என்பவரே காயமடைந்துள்ளார்.
வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இவர் துப்பாக்கி சூட்டினில் காயமடைந்த போதும எந்தவொரு மோதல் சம்பவத்துடனும் தொடர்பு அற்றவரென கூறப்படுகின்றது.
இந்நிலையில் காயமடைந்த நிலையினில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவரை வழிமறித்து படையினர் மீண்டும் தாக்கியதாகவும் அத்துடன் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து வந்திருந்தவர்களையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை கைது செய்த படையினர் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று பின்னர் விடுவித்திருந்ததாக தெரியவருகின்றது.