யாழ். வரணியில் குளத்தில் மூழ்கிய இளைஞன் பலி!

0
13

யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரணி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரும் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இவர் குறித்த இளைஞரின் காதலி எனவும் – இளைஞரின் பிரிவைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக யாழ். ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here