
யேர்மன் மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களது 10ஆவது நினைவு வணக்கநாள் நிகழ்வு வூப்பர் கலையரங்கில் 06.04.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைக்க தொடங்கிய நிகழ்வு சுடர்வணக்கம், மலர்வணக்கம், நினைவுரைகள், எழுச்சி நடனங்கள் மற்றும் நினைவுக் கவிதைகள் என அவரது நினைவுகளைத் தொடராகப் பதிவுசெய்தவாறு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.
மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவுச் சுடரினை அவரது மகன் திரு. நாகலிங்கம் நிர்மலன் அவர்கள் ஏற்றிட, மலர் மற்றும் சுடர் வணக்கத்தினை ஐயாவின் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகமருமகள் ஏற்றிட, மலர் மாலையை யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத் தேர்வு மற்றும் துணைப்பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் ஆகியோரால் அணியப்பட்டதைத் தொடர்ந்து வருகைதந்த உறவுகளால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செய்யப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளரின் சிறப்புரையும், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த் திறன் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு.இராஜ.மனோகரன், தமிழ்க் கல்விக் கழகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத் தேர்வு மற்றும் துணைப்பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் திரு. நடராசா திருச்செல்வம், யேர்மனியத் தமிழர் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு. சுந்தரலிங்கம் கோபிநாத், தாயக நலன் பேணலகப் பொறுப்பாளர் திரு. ராஜன், த.க.கழக வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் திரு. கந்தையா அம்பலவாணப்பிள்ளை, தமிழாலயம் சோலிங்கன் ஆசிரியை திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், தமிழாலயம் லிவகுசன் நிருவாகி திரு. நாகநாதன் மனோகரன், ஆகியோரின் நினைவுரைகளும், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் மருமகளான திருமதி வோதா நிர்மலன் அவர்களின் விதப்புரையும், தமிழ்க் கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் செல்லர் தெய்வேந்திரம், மத்திய மாநிலச் கல்விச் செயற்பாட்டாளர் காந்தரூபி சந்திரகுமாரன் ஆகியோரின் நினைவுக்கவிதைகளோடு, தமிழாலய மாணவர்களின் கவிதைகள், உரைகள், எழுச்சிப்பாடல்கள் என அரங்கை மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவுகளால் நிறைத்துச் செல்ல 20:00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று எழுச்சியுடன் நிறைவுற்றது.




































