தேசியத்தலைவரின் தாரக மந்திரத்துடன் உருவாக்கம் பெற்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி!

0
15
Lieutenant Charles Anthony Special Regiment

பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் திகதி தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது.

“வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியுமன்று அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திர பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்.” என்ற இந்த வரலாற்று வரிகள் தமிழீழ தேசியத் தலைவரால் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் வெளியிடப்பட்ட சுதந்திர விடுதலைப்போரின் கள வரலாறு ஆன நெருப்பாற்று நீச்சலில் 10ஆண்டுகள் என்ற நூலுக்கான ஆசிச் செய்தியில் உள்ளடக்கப்பட்ட முதல் வரிகளாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் போராடி உயரிய உயிர்கொடை தந்தவன் லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி ஆவான் இந்த மாவீரனின் பெயரால் தமிழீழ தாயக விடுதலைப்போரின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப்படையணியே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆகும்.

ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு 1991ஆம்ஆண்டு பங்குனித் திங்கள் 25ஆம்நாள் (ஏப்ரல் 10ஆம்நாள்) சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிவரலாற்றில் தடம்பதிக்கத்தொடங்கியது. உலகில் உள்ள பல்லாயிரக் கணக்கான படையணிகளையும்விட வித் தியாசமாகவே இந்தப்படையணியின் அடித்தளம் மிகவலுவாக போடப்பட்டது. உலகிலுள்ள படைத்துறைசார் படையணிகளைவிட தாயக விடுதலைக்காக போராடி தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தை பெற்று எடுப்பதே தனது இலட்சியம் என்ற அடிப்படை உண்மையுடன் கட்டி எழுப்பப்பட்டது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆகும்.

பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற அடிப்படை கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இவற்றையும் கடந்து அளப்பரிய தியாகங்களையும் மயிர்க்கூச்செறியும் வீரசாதனைகளையும் சொற்களால் சொல்லிவிடமுடியாத அர்ப்பணிப்புக்களையும் எழுத்தில் எழுதிடமுடியாத கொடைகளையும் செய் துமுடித்தது படையணியின் வீரம்செறிந்த வரலாறு சாதனைகளிலே படைக்கப்பட்டது சாதனையின் ஒத்தசொல் சாள்ஸ் அன்ரனி எனும் அளவிற்கு படையணியின் வீரம் மேலோங்கி விட்டது.

Lieutenant Charles Anthony Special Regiment

படையணியின் இந்தளவு வெற்றிக்கும் புகழுக்கும் சாதனைக்கும் காரணம் படையணியின் நாமத்தை சுமந்திருக்கும் லெப். சீலன் என்னும் மாவீரனின் உயிர்த்துடிப்புள்ள உயரிய வீரம் ஆகும். இவனது நாமத்தின் இரகசியமே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வெற்றிகளாகும்

1991ஆம்ஆண்டு தொடக்கம் 2005ஆம்ஆண்டாகிய இன்றளவும் ஈழத்தின் சுதந்திர நாள்வரை சாள்ஸ் அன்ரனி சிறப்பு ப்படையணிப் போராளிகளுக்கு வீரத்தையும் விவேகத்தையும் தியாகத்தையும் தற்கொடை யையும் உயிரோட்டத்தில் உணர்வாக ஏற்றிவிட்டவை. லெப்.சீலன் எனும் அந்த மகத்தான வீரனின் வரலாற்று வரிகளாகும் என்னைச் சுட்டுவிட்டு என் துப்பாக்கியை அண்ணையிடம் கொண்டுபோய் கொடு இந்த வரிகளில் எத்தனையோ புனிதம் மிகுந்த கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. வீரம் அர்ப்பணிப்பு தற்கொடை தாயகப்பற்று தலைவரிடத்தில் உள்ள மேலானபாசம் என்ப வற்றையும்விட சிறிதளவேனும் மாறிடா இலட்சியப்பிடிப்பு என்பனவற்றின் அடிப்படையை ஒத்ததாக லெப்.சீலனின் நாமம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வழிகாட்டியாக அமை ந்துவிட்டது எனவேதான் தமிழீழதாயகத்தை மீட்டெடுக்க நடந்த அனைத்து களங்களிலும் உறுதியோடு இறுதிவரை அக்கினி ப்பிழ ம்புகளுக்குள் நின்று நீராடி வெற்றிகளைப் பெற் று தாயக விடுதலையை இலகுவாக்கியது. எனவேதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு இயலாத ஒன்று இருக்காமல் போய்விட்டது.

Lieutenant Charles Anthony Special Regiment

தேசியத்தலைவரின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து 1991ஆம்ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ தாயகத்தின் சுதந்திரத்திற்காக நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளை பெற்றது. ஒவ்வொரு களத்திற்குள்ளும் உள்நுழையும்போதும் வெற்றியுடன் திரும்புவோம் என்ற உறுதியுடனேயே களம் சென்று வெற்றியுடனேயே திரும்பிவந்த வரலாறே ஏராளம் உண்டு.

Lieutenant Charles Anthony Special Regiment

05.05.1991 அன்று சிங்கள தேசத்தின் ஆக்கிர மிப்பாளர்கள் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் என்ற இடங்களில் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்தை வன்னி விக்கிரம 2 பெயர் நடவடிக் கை மூலம் பெரும் எடுப் பிலான இராணுவ முன்னெடுப்பினூடாக ஆரம்பித்தனர் தான் நினைத்ததே நடக்கும் என்ற பேராசை யுடன் ஆக்கிரமிப்பை ஆரம்பித்த எதிரிக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமலே இருந்தது.

Lieutenant Charles Anthony Special Regiment

பல்லாயிரம் படைகளுடன் விமானங்கள் உலங்குவானூர்திகள் கவசவாகனங்கள் என தொடர்ந்து ஆட்லறி ஏவுகருவிகள் உந்துகை ணகள் என பல இராணுவ முன் னெடுப் பை எதிரி ஆரம்பிக்க சிறிலங்காவின் வடபிராந்திய இராணுவ த்த ளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ தலை மையில் சிங்களப்படை களின் கெமுனு கஜபா படையணிகளின் 2டி விசன்களுக்கு மேலான படைகள் நக ர்வுகளை ஆரம்பித்தது விண்ணை முட்டிய வெடியோசையும் எறிகணை வெடிப்புக்களும் விமானக்குண்டுகளும் எதிரியின் மூர்க்கமான ஆக்கிரமிப்பை பறைசாற்றின எதிரியின் ஆள் ஆயுதப் பலத்தைவிட போராளிகளின் பலம் குறைந்து இருந்தது. என்றாலும் மனப்பலம் போராளிகளுக்கு உச்சத்தே இருந்தது அதைவிட தலைவரின் வழி நடத்தல் தந்திரோபாயம் மேலாக இருந்தது.

Lieutenant Charles Anthony Special Regiment

எதிரிமுற்றிலும் எதிர்பாராதளவு மின்னல் வேகத்தாக்குதலை ஆரம்பித்துவிட்டது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி எதிரி என்ன நடக்கிறது என்று சிந்திக்கமுன்னே அடிபட்ட நாயாய் ஓடத்தொடங்கிவிட்டான். வாய்ப்பேச்சில் வீராக இருந்த சிங்களத்தலைமைகள் வாய்பேசாது மௌனித்து நின்றன எதிரிக்கு பாரிய ஆள் ஆயுத சேதம் ஏற்பட எதிரி பின்வாங்கி ஓடிவிட்டான். சாள்ஸ் அன்ரனியின் முதலாவது தாக்குதலில் ஓடத்தொடங்கிய சிங்களப்படைகள் தொடர் ஓட்டத்திலே பங்கேற்கத் தொடங்கியது வன்னிவிக்கிரம -02இல் தோல்வியடையத் தொடங்கிய சிங்களம் இன்று வரை தோல்வியையே சந்திக்கிறது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது தாக்குதலில் அடிவாங்கிய சிங்களப்படைகள் இற்றைவரை சுமார் 82 தாக்குதலுக்குமேல் அடிவாங்கியே ஓய்ந்து போய் இருக்கின்றன.

ஆனால் அன்றைய முதல் சமரில் தனது தந்திரோபாய யுக்தியினாலும் திறமையான பயிற்சியினாலும் எதையும் வென்றிடும் வீரத்தினாலும் மின்னல் வேகத்தாக்குதலால் வெற்றி கொண்டதுபோல் இன்றுவரை அதாவது வன்னிவிக்கிரம -02 தொடக்கம் பன்னிரெண்டாயிரம் எதிரிப்படைகளோடு 72 மணிநேரம் ஓயாது போரிட்டு வெற்றிகொண்ட தீச்சுவாலை சமர் வரை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வெற்றிமேல் வெற்றிபெற்று சாதனையின் உச்சத்திற்கு சென்று எதையுமே எதிர்கொள்ளும் சிறப்பு ஆற்றலை பெற்றது.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கே யுரிய வேகமும் வீரமுமே அதன் வெற்றிக்கு உதவிக்கரம் நீட்டியது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைந்து கொண்ட ஒவ்வொரு போராளியும் தனக்கென சாதனை ஒன்றினை தேர்ந்து எடுத்துக்கொண்டான் ஒவ்வொரு விடுதலைப் போராளியும் ஈழதேசத்தின் விடு தலை உணர்வின் உச்சத்தே சென்று விட்டமையினால் தாயக சுதந்திரத்திற்காய் தாம் ஒவ்வொருவரும் உயரிய தியாகம் செய்ய வேண்டுமென தன்னகத்தே சபதம் செய்து கொண்டனர் இவர்களின் இந்த உணர்வோடு படையணியில் ஏற்கனவே வீரகாவியமான மாவீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் உயிரோட்டமாக ஒவ் வொரு களத்திற்குள்ளும் உள்நுழையும் போராளிகள் வீராவேசத்துடன் போர்புரிந்து மயிர்க்கூச்செறியும் வீரசாதனை களை செய்து ஈற்றில் தம் முயிரையே கொடை யாக தந்து சாதனை படைத்தனர்.

கொடிய இராணுவ முற்கம்பி வேலியில் படுத்து எனக்கு மேலால் ஏறி ஓடுங்கோ என்றான் ஒரு வீரன்

என்னைப்பார்க்காமல் ஷெல்லை எனக்கு மேலால் அடியுங்கோ என்றான் ஒருவீரன்

நான் போறன் பொறி வெடித்ததும் அதற்குப்பின்னால் வாருங்கள் என்றான் ஒரு வீரன்

எதிரியின் இயந்திரத்துப்பாக்கி சடசடக்க நான் நேரே செல்கிறேன் நீங்கள் பக்கவாட்டாக நகருங்கள் என்றான் ஒருவீரன்

எதிரியின் துப்பாக்கி சுட்டுக்கொண்டிருக்க தணல்போல் பழுத்திருந்த அவனது துப்பாக்கி குழலைப்பிடித்து இழுத்து சூட்டை நிறுத்தி ஓடுங்கடா உள்ளே என்றான் ஒருவீரன்

இப்படியாக இன்னும் எத்தனையோ வீர சாதனைகளும் தியாகங்களும் அர்ப்பணிப் புக்களும் படையணியின் உயிரோட்டத்தில் கல ந்திருந்தமையினாலேயே எந்தக் களம்சென்றாலும் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கோட்பாட்டில் எதையும் வென்று இயலாது ஒன்று இருக்காது எமக்கு என்ற தாரக மந்திரத்திற்கு அமைய வெற்றியோடு நிமிர்ந்து நிற்கிறது.

கரந்தடிப்படையாக இருந்த எமது விடுதலைப்போராட்டம் மரபுவழிப்படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கிய நாள் முதல் தாயக விடுதலைப் போராட்டம் தளர்வி ல்லா உறுதிகொண்ட புதிய மூச்சாய் எழுந்து நிற்கின்றது என்றால் மிகையா காது சொன்னதை சொன்னபடியே சொல்லிய இடத்தில் சொல்லி யநேரத்தில் செய்து முடிக்கும் திறன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் இருந்தமையினாலேயே செல்லும் களம் எங்கும் வெல்லும் படையணி ஆகி ஈழப்போராட்டத்திற்கு மிகை யானதோர் உந்துசக்தியாக திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here