
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வளமான எதிர்காலத்திற்கான நூற்றாண்டு பழமையான நட்பு என்ற கருத்தின் கீழ் இந்தியப் பிரதமர் இந்த அரசு முறைப் பயணத்தில் பங்கேற்கிறார்.