
யாழ். சுன்னாகம் பழனிகோவிலடிப் பகுதியில் இன்று இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 19 வயதான சிவராசா பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

உந்துருளியில் அதிவேகமாகச் சென்றதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இவ் விபத்துத் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.