
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்-சுவிசு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம்- பிரான்சு இணைந்து நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 2025. மார்ச் 22 , 23 ஆம் நாட்களில் பாரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லே கோணேசில் நடைபெற்றது. நிகழ்வுகள் 22 ஆம் நாள் காலை 10.00 மணிக்கு வரவேற்பு விளக்கேற்றலுடன் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து நடராசர் இறைவணக்கம் இடம்பெற்றது. வணக்க ஒளியேற்றலை ஆற்றுகைத்தேர்விற்கு நடுவர்களாக வருகை தந்திருந்த திருவாட்டி அம்பிகை பாலகுமார் திருமிகு செகசோதி நிரூஜன், திருமிகு பரமேஸ்வரன் பிரசாத் ஆகியோரும்,
திருவாட்டி ஆனந்தராஜா கௌசலா, திருமிகு கணேசசுந்தரம் கண்ணதாஸ், திருமிகு கனகசபாபதி சேயோன் திருவாட்டி தில்லைரூபன் மோகனரூபி, திருவாட்டி சிவானந்தராஜா சிறீகாந்தரூபி ஆகிய கலையாசியர்கள் ஏற்றி வைத்தனர்.மங்கல விளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திருமிகு மேத்தா , தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் திருவாட்டி சுபத்திரா அமலகுமார், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு நாகயோதீஸ்வரன், செயலாளர் திருமிகு காணிக்கைநாதன்,பொருளாளர் திருமிகு பேரின்பமூர்த்தி மற்றும் 95 மாவட்ட விளையாட்டு கழக பொறுப்பாளர் திருமிகு ரமேஷ்,கார்ஜ் லே கோணேஸ் நகரசபையில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த திருவாட்டிகள் Claude Lalliaud,Gisele Frey, Adi Sadasivam, Berard Gunot ஆகியோர் ஏற்றிவைத்தனர் .
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து
வரவேற்புரையை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயலாளரும், கலைப்பிரிவுப் பொறுப்பாளருமாகிய திருமிகு காணிக்கைநாதன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து முதலாம் நாளுக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வுகள் இடம்பெற்றன.
வயலின் : இசைக்கதம்ப ஆசிரியை திருவாட்டி சிவானந்தராஜா சிறீகாந்தரூபி அவர்களின் மாணவி செல்வி சிவானந்தராஜா ஆரபி அவர்களும்
தண்ணுமை: ஆசிரியர் திருமிகு கனகசபாபதி சேயோன் அவர்களின் மாணவர் செல்வன் சிவராசா மதுசன் அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து வருகை தந்திருந்த நகரசபையின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் மதிப்பளிக்கப்பட்டனர்.
மதிப்பளிப்பின் பின்னர் ஆற்றுகைத் தேர்வுகள் தொடர்ந்தன. நடனம் :கலாலயம் ஆசிரியை திருவாட்டி ஆனந்தராஜா கௌசலா அவர்களின் மாணவி செல்வி ஜெயதாஸ் நிரோசா அவர்களும்
ஆதிபராசக்தி கலைப்பள்ளி ஆசிரியை திருவாட்டி தில்லைரூபன் மோகனரூபி அவர்களின் மாணவி செல்வி திருஞானசுந்தரம் ஆராதனி அவர்களும் ஆதிபராசக்தி மாணவி செல்வி அற்புதநாதன் அபர்ணா அவர்களும் தமது ஆற்றுகையினை நிகழ்த்தியிருந்தனர். மாலை 6.30 ற்கு முதலாம் நாள் ஆற்றுகைத் தேர்வுகள் நிறைவடைந்தன.
இரண்டாவது நாளாக 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு வரவேற்பு விளக்கு ஒளியேற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து இறைவணக்க ஒளியை நடன ஆசிரியர்கள் திருவாட்டிகள் செல்வராஜ் றோணி, மணிவண்ணன் அனுசா அவர்களும் ஏற்றிவைத்தனர்.
மங்கல விளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் திருவாட்டி சுபத்ரா அமலகுமார் தமிழ்ச்சோலை தலைமைப்பணியக பொறுப்பாளர் திருமிகு நாகஜோதீஸ்வரன், செயலாளர் கலைப்பிரிவுப்பொறுப்பாளர் திருமிகு காணிக்கைநாதன், செயற்பாட்டாளர்கள் திருமிகு சிவகுமார்,திருமிகு டக்ளஸ் மற்றும் அன்றைய தேர்வுக்கு நடுவர்களாக சுவிசிலிருந்த வருகை தந்திருந்த திருவாட்டிகள் பவானி சிறிதரன்,நிமலினி ஜெயக்குமார்,மீனாம்பிகை வசிகரன் ஆகியோர் ஏற்றி வைத்திருந்தனர்.
தொடர்ந்து ஆற்றுகைத்தேர்வுகள் நடைபெற்றது. நடன ஆற்றுகை:
சலங்கையொலிக் கல்லூரி ஆசிரியை திருவாட்டி மணிவண்ணன் அனுசா அவர்களின் மாணவிகள் செல்வி ஜக்சன் ஆன் ஜெனீபர் அவர்களும் அவரைத் தொடர்ந்து செல்வி குணசுந்தரம் தாரகா ஆகியோர் வழங்கியிருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து திரான்சி தமிழ்ச்சோலை ஆசிரியை திருவாட்டி செல்வராஜ் றொனி அவர்களின் மாணவிகளான செல்வி திலீப்குமார் திசானிகா செல்வி கோகுலதாஸ் வித்தியா செல்வி திலீப்குமார் தானுகா ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இரண்டு நாட்களும் நடைபெற்ற ஆற்றுகைத் தேர்விற்கு தமிழீழத் தாயகம், தமிழ்நாடு, நோர்வே, பிரான்சு சுவிசு ஆகிய நாடுகளில் வாழும் இளைய கலைஞர்கள் உட்பட பலர் அணியிசைக் கலைஞர்களாக கடமையாற்றியிருந்தனர். மண்டபம் நிறைந்த மக்களோடும் கை தட்டல்களுடனும் எமது வளர்ந்து வரும் இளைய கலைஞர்கள் உற்சாகமாக தமது ஆற்றுகையை வழங்கியிருந்தனர். இவர்களை செதுக்கிய கலை ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும், தமிழர் கட்டமைப்புக்களும் பாராட்டியிருந்தன.
நன்றியுரையை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக செயற்பாட்டாளர் திருமிகு டக்ளஸ் அவர்கள் ஆற்றியிருந்தார். இரண்டு நாட்களுக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வினை தலைமைப் பணியகத்தின் அறிவிப்பாளர் குழுமத்தின் இளையோர்களாகிய செல்வன் நிதுசன் செல்விகள் டிலக்ஸ்சனா,ஜதுஷா மற்றும் சோபிகா ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர்.மாலை 18.30 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.























