
யாழ் தையிட்டியில் இராணுவத்தினரால் சட்டவிரோத அமைக்கப்பட்ட விகாரைப் பகுதியில் இன்று காலை (23.03.2025) மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் திறப்பு – எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
தையிட்டி சட்டவிரோத விகாரை காணியை விடுவிக்க கோரும் காணி உரிமையாளர்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் சட்டவிரோத விகாரை காணியில் மீண்டும் ஒரு புதிய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது. இங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.


