
வாரியப்பொல, மினுவாங்கேட்டே பகுதியில் சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளதுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் விமானம் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.