
பிரான்சில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (15.03.2025) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு கிரிணிப் பகுதியில் அவரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட துயிலுமில்லத்தில் இடம்பெற்றது. மாவீரர் பணிமனை உறுப்பினர், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பாளர் ஆகியோர் நாட்டுப்பற்றாளர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்களின் கல்லறைக்கு தமிழீழத் தேசியக்கொடியினைப் போர்த்து மதிப்பளித்தனர்.
ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க, மலர்வணக்கத்தை அவரின் பிள்ளைகள் செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து உறவுகள், நண்பர்கள் மலர் வணக்கத்தையும் சுடர்வணக்கத்தையும் செய்தனர். நாட்டுப்பற்றாளர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள் பற்றிய நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களால் ஆற்றப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிறைவுபெற்றது.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு – ஊடகப் பிரிவு)
















