அனைத்துலக பெண்கள் நாளில் பல்லின மக்களுடன் கைகோர்த்த பெல்சியம் தமிழர்கள்.

0
8

அனைத்துலக பெண்கள் நாள் நாம் தமிழீழப்பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம் .தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது. தமிழீழத்தேசியத்தலைவரின் வழிநடத்தலில் தமிழீழப் பெண்கள் அடக்கு முறைகளில் இருந்து வெளிவந்து ஆண்களிற்கு சரி நிகராக அரசியல் ரீதியாகவும் ,ஆயுத ரீதியாகவும் போராடி சாதனையாளர்களாக தடம் பதித்திருக்கின்றார்கள். 2009 இறுதி யுத்தத்திற்கு பின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் பெண்கள் சொல்லெண்ணா துன்பதுயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றிற்கான நிரந்தர தீர்வு தனித்தமிழீழம் தான் என்பதனை வலியுத்தி 08.03.2025 அன்று பெல்சியத்தில் அன்ற்வேற்ப்ன் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் நாளில் பல்லின மக்களுடன்  பேரணியாக கலந்து சிறப்பான முறையில் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here