
அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீ ர்ப்பு போராட்டமும், உலகப்பெண்களுக்குமான வாழ்த்துச் சொல்லுமுகமாகவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.
காலத்தின் தேவை கணிப்பிட முடியாதது.எனினும் சாலச்சிறந்த முறையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.எமது தாயகப் பெண்களின் அவலமும் அன்றாட வாழ்க்கைப் போராட்டமும் உலகத்திற்கு சொல்லப்பட வேண்டிய வென்றெடுக்கப்பட வேண்டிய கடமையாகும்.அதனை எடுத்துச் செல்லுமுகமாக அமைந்த துண்டுப்பிரசுரமும், தமிழர்களாகிய நாம் அன்பானவர்கள்,நன்றி மறவாதவர்கள்,என்ற முறையில் சுவிஸ் நாட்டிற்கு நன்றி சொல்லும் வித பதாதையும் வைத்து பண்பாட்டின் வெளிப்பாடாக பெண்களுக்கு பூவும் கொடுத்து மன நிறைவாக இந்த நிகழ்வை செய்து முடித்தோம். மாவீரர்கள் சக்தி மகத்தானது.அது நம்மை நமது இலட்ச்சியத்தை வென்றெடுக்க என்றும் பக்க பலமாக நிற்கும்.
”விழி வழி நீர் துடைக்க விரைந்து செயற்படுவோம்”
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
சாதனைப் பெண்கள் சரித்திரம் படைத்தவர்
வேதனை யாவையும் வீசியே எறிந்தவர்கள்
அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்களும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு



