தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவு நாள் மே 18 குறித்து தமிழீழ மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!

0
60

அன்பான பிரெஞ்சு வாழ் தமிழீழ மக்களே! புரட்சிகரமான வணக்கங்கள்!
தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவு நாள் மே 18 ( 18.05.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியும், நினைவேந்தலும். தமிழீழ மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!
அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே! தமிழர் வாழ்வில் என்றும் மறக்க முடியாததொரு மாதம் மே மாதம், மறக்க முடியாதொரு நாள் தான் மே18. இந்த உலகம் பார்த்திருக்க எம் கண்முண்னே எம் தேசத்திலே எம்மினம் கொல்லப்பட்டு இன்று வரை அதற்கானதொரு நீதியும், பொறுப்புக்கூறலும் தண்டனையும் இல்லாமல் 16 ஆண்டுகள் ஆகியும் கடந்த கால அரசுகள் போன்றே இன்றைய அரசும் பயணிக்கின்றது.
எமக்கானதொரு தேசம், எமக்கான நீதி, சர்வதேசம் பெற்றுத்தரும் வரை புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும், தமிழர் கட்டமைப்புகளும், தாயகக்கட்டமைப்புக்களும் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும் ஓர் உணர்வு மிக்க களமாகவே மே 18 ஆம் நாள் அமையப்பெற்றிருக்கின்றது.
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் உலகத்தின் காதுகளுக்கு இன்னும் உரத்துச்சொல்லும் வகையில் நடைபெற ஏற்பாடாகி வருகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் 18.05.2025 ( ஞாயிற்றுக்கிழமை) பிரான்சு தேசத்தில் பாரிசில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் பேரணியில் சிறியவர்கள் முதல் இளையவர்கள் பெரியவர்கள் என பல்லாயிரக்கணக்காக அணிதிரளுமாறு அழைக்கின்றோம். அதேபோல் பிரான்சு தேசத்தின் வெளியிலான 9 மாவட்டங்களிலும் நடைபெற்வுள்ள மே 18 தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்புப்போராட்டங்களிலு; பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்வதோடு,
இந்நாளில் ஆன்மீக திருக்கோயில்களிலும், இந்து, சைவ ஆலையங்களிலும் விசேட வழிபாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதுடன், தனியார் கல்விநிலையங்கள், கலைக்கூடங்கள், விளையாட்டுக்கழகங்கள், ஒன்றியங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நீதிக்கான இப்பேரணியில் பங்கெடுக்குமாறும், அன்றைய நாளில் ( மே 18 ) அன்று எந்தவிதமான களியாட்டங்களையோ, கொண்டாட்டங்களையே செய்யாது தவிர்க்குமாறும் அன்புரிமையுடனும், வேண்டுகோளாகவும் கேட்டுக்கொள்கின்றோம்.
மே 18 ஏற்பாட்டுக்குழு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here