வங்கக் கடலிலே வீர காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 23 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (16.01.2016) சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் போர்த்து லாச்சப்பல் பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திரான்சி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. பாபு அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 1993 ஆம் ஆண்டு பூநகரிப் பகுதியில் நடந்த சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். இளங்கீரனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. எழுச்சி நடனங்கள், கேணல் கிட்டு தொடர்பான பேச்சு, சிறப்புரை, பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள் போன்ற நிகழ்வுகள் நிகழ்வை சிறப்பித்திருந்தன.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.
IF