
கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை மயில்வாகனம் எனும் நபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசுவதை அறிந்து வெள்ளிக்கிழமை (7) காலை 09.00 மணியளவில் அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்தனர்.
குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக காணப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் இது தொடர்பில் பளை காவல்துறையினருக்குக்கு அறிவித்தனர்.
சடலமாக காணப்படும் பெண் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியையான தவராசசிங்கம் சரஸ்வதி (வயது 54) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
