
வன்னிமயில் 2025 விருதுக்கான போட்டி 02.03.2025 ஞாயிற்றுக்கிழமைPIERRE SCOHY – Aulnay Sous Bois மண்டபத்தில் நடைபெற்றது. அதிஅதி மேற்பிரிவு அ,ஆ,இ மற்றும் சிறப்புப்பிரிவு அ,ஆ வுக்கும் பாலர்பிரிவு குழுவினருக்குமான போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய இறுதிநாள் போட்டியின் நடுவர்களாக பிரித்தானியா, சுவிசு, நெதர்லாந்து தேச மூத்த நடன ஆசிரியர்களும், நடனத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் நடுவர்களாக இருந்திருந்தனர். இவர் தமிழர் மரபின் படி மதிப்பளிக்கப்பட்டு அவர்களிடம் போட்டியின் வெற்றியாளர் தெரிவுக்கான படிவம் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருவாட்டி. ஜனனி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றைய நாளில் தமது அற்புத தனித்திறனை வளர்ந்து வரும் சிறார்கள் பாலர் பிரிவினர் காட்டியிருந்தனர். இன்றைய நாள் அவர்களின் குழுநடனம் மிகவும் சிறப்பாக இருந்திருந்தது. எம் தேசப்பாடலுக்கு பிஞ்சுப்பாதங்கள் பிடித்த அபிநய நடனத்திற்கு கரவொலியால் மண்டபம் அதிர்ந்தது.


2025 நடைபெற்ற 9 நாட்களும் ஆயிரத்தி நூற்றி ஜம்பது( 1150) போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புரையை திரு. மோகன் அவர்கள் ஆற்றியிருந்தார். 40 க்கும் மேற்றபட்ட முத்த மற்றும் இளைய நடன ஆசிரியர்கள் மேடையில் மதிப்பளிக்கப்பட்டனர். பிரான்சின் மூத்த நடன ஆசிரியர் கடந்த ஆண்டு வன்னிமயிலுக்கு கடமையாற்றிய நடனக்குருவான திரு. தளயசிங்கம் அவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு மதிப்பளிப்பும் செய்யப்பட்டார்.



இன்றைய நாள் நடனப்பிள்ளைகளின் பல வருடக்கனவு இந்த வன்னிமயில் என்னும் விருதாகும். அதற்கான பல நாள் கடும்பயிற்ச்சி, கடும் போட்டிகள் நடைபெற்றது. அதிஅதி மேற்பிரிவில் 50 போட்டியாளர்கள் அ,ஆ,இ சிறப்புப்பிரிவு அ,ஆ போட்டிகள் 05 பேர் தெரிவாகி வன்னிமயில் விருதுக்கான மீண்டும் அன்றே போட்டியிட்டனர். இன்றைய போட்டியில் நடுவர்களாக கடமையாற்றி 06 நடுவர்களின் தீர்ப்பின் முடிவாக 2025 வன்னிமயிலாக தெரிவு செல்வி. சில்வியா ஜெகநாதன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இரவு 8.30 முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ரிரிஎன் தமிழ் கடசி இரண்டு நாட்களும் நேரடி ஒலிபரப்பு செய்திருந்தது. ttn.tv
நன்றி




