தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 16 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்!

0
33

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா  அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் திங்கட்கிழமை மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது. 

அதன் தொடர்ச்சியாக கடந்த 4 நாட்களாக சுவிஸ் நாட்டை ஊடறுத்துப் பயணித்து 27.02.2025 சுவிஸ் நாட்டின் பிறைவூர்க் மாநில எல்லையில் நிறைவடைந்தது.

அறவழிப்போராட்டத்தின் 16 ஆம் நாளாகி (28.02.2025) இன்று அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,வோ மாநிலத்திற்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.தற்போது நிலவும் கடும் மழை, குளிரையும் பொருட்படுத்தாது மலை வழிப்பாதைகளினூடாக கடினமான பயணத்தை அர்ப்பணிப்போடு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம் தமிழ் உறவுகளே!

தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில்   தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான  நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதற்கான அழுத்தினை கொடுக்க வேண்டும்.இதன் ஊடாக,அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும். எனவே இப்போராட்டங்களுடன் நீங்களும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.

எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

 “ தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்”

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here