
மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் முற்றிலும் இலவசமாக நேற்றைய தினம் 89 ஏழை நோயாளர்களுக்கு கண் வெண்புரை அகற்றல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் 52 பேர் கிளிநொச்சி மாவட்டத்தினையும், 37 பேர் யாழ் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
சிவன் எல்லையில்லாப் பெருஞ்சோதியாகத் தோன்றி பிரம்மாவுக்கும், விஸ்ணுவுக்கும் அருள்புரிந்து உலக மக்களுக்கு உய்வுண்டாக்கிய சிவராத்திரி நன்னாளில் அயர்லாந்தில் உள்ள ஒரு நினைவு நிதியத்தின் பங்களிப்பில் கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் M.மலரவனின் தலைமையில் கண் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் அணியினரால் இந்த நற்பணி மேற்கொள்ளப்பட்டமை பாராட்டுக்குரியது.
இந்த வருட ஆரம்பம் முதல் இன்றுவரை மிகுந்த வளப்பற்றாக்குறைகளின் மத்தியிலும் யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவில் 1925 கண் வெண்புரையகற்றல் சத்திர சிகிச்சைகளும் 250 இதர சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.