உக்ரைனின் உட்கட்டமைப்புகளை நோக்கி ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா!

0
137

ரஷ்யாவிற்கும் (Russia) உக்ரைனுக்கும் (Ukraine) இடையிலான போர் இன்றுடன் (24.02.2025) மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. 

ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022 இல் போரை தொடங்கியது.இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதல்

உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று (23.02.2025) ஒரே நாளில் ரஷியா 267 ஆளில்லா விமானங்களை உக்ரைன் மீது ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.

உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், “ரஷியா ஏவிய 267 ஆளில்லா விமானங்களைில் 138 இடைமறிக்கப்பட்டன. 

பேலஸ்டிக் ஏவுகணை

இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பேலஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.

இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ஆளில்லா விமானங்களை அழித்தது. என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here