
மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் எல்லையை இன்று சென்றடைகின்றது.
மனிநேய ஈருருளிப்பயணம் 3நாட்கள் பிரான்சு நாட்டுக்குள் பல மாநகர முதல்வர்களைச் சந்தித்து மனுக்களைக் கையளித்து இன்று மாலை 16:00 மணியளவில் சுவிஸ் எல்லையான பாசல் நகரில் நிறைவு செய்து அங்கிருந்து சுவிஸ் மனித நேயப்பணியாளர்களால் சுவிஸ் ஜெனிவா நோக்கி மனிநேய ஈருருளிப்பயணம் பயணித்து 03.03.2025 அன்று முருகதாசன் திடலில் நிறைவு செய்கிறது.



தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.