
தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்புகளின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பெயர் பட்டியலையும் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
1. Liberation Tigers of Tamil Eelam (LTTE)
2. Tamil Rehabilitation Organization (TRO)
3. Tamil Coordinating Committee (TCC)
4. World Tamil Movement (WTM)
5. Transnational Government of Tamil Eelam (TGTE)
6. World Tamil Relief Fund (WTRF)
7. Headquarters Group (HQ Group)
8. National Thowheed Jama’ath (NTJ)
9. Jama’ate Millathe Ibrahim (JMI)
10. Wilayah As Seylani (WAS)
11. National Council of Canadian Tamils (NCCT)
12. Tamil Youth Organization (TYO)
13. Darul Ath’thabawiyya
14. Sri Lanka Islamic Student Movement (SLISM)
15. Save the Pearls