கடற்கரும்புலி லெப். கேணல் கரன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்!

0
17

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையின் “வலம்புரி” கப்பல், மற்றும் “பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது தமிழர்களின் வீரம் மீண்டும் சிங்களத்திற்கு கடற்கரும்புலிகளால் புகட்டப்பட்டது.

பல சாதனைகள் தடம் பதியப்பட்டும் சென்றது. இத் தாக்குதலில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டும் 62 கடற்படையினர் படுகாயமடைந்தும் கப்டன் தர அதிகாரி உட்பட சில கடற்படையினர் தமிழ்நாட்டுக்கு தப்பிசென்று பின்னர் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
அராலி மேற்கு, கொட்டைகாடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
வெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
கொட்டடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1998

வீரவேங்கை வினோத்
மாசிலாமணி குலாஸ் மைக்கல் குலாஸ்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 22.02.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here