முகமாலை வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மூன்றாவது முறையாக விசமிகள் தாக்குதல்!

0
10

முகமாலை வடக்கு ஏ9 வீதியோரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்றுமுன்தினம் (19-02-2025) நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த கடை மீது 2020ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்புக்கம்பியை பயன்படுத்தி கடையின் சொத்துக்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் அதே கடை மீது நேற்றைய தினம் மூன்றாவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பளை பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here