வித்தியா படுகொலை விவகாரம்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

0
31

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை 2015 ஆம் ஆண்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார். பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன.

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை ஆரம்பத்தில் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருட சிறைத்தண்டை வழங்கி தீர்ப்பளித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு இன்று (20-02-2025) வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது சுவிஸ்குமார் அவர்களை பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அவர்களுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.

மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜன் அவர்களுக்கும் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here