
சாவகச்சேரியில் பூநகரி மகாவித்தியாலய அதிபர் மற்றும் ஓய்வு அதிபர் மீது காடையர் குழுவின் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை (15.02.2025) பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த காடையர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற அதிபர் விசுவாசம் அவர்கள் இன்று உயிரிழந்துள்ள செய்தி கல்விப்புலத்துக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.