தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 3.3.2025 திங்கட்கிழமை ஜெனீவா வில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டமும், அதில் பிரான்சு பாரிசிலிருந்து செல்வதற்கு TGV கடுகதி தொடருந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன். தமிழின அழிப்பிற்க்கு சர்வதேச நீதிவேண்டி 12.02.2025 பிரித்தானியாவிலிருந்து ஈருருளி பயணப்போராட்டம் ஆரம்பித்துள்ளது
பல ஐரோப்பிய நாடுகளின் ஊடாக அரச தரப்பினர்களைச் சந்தித்து தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி 22.03.2025 பிரான்சை வந்தடையும் இந்த ஈருருளி பயணப்போராட்டம் பிரான்சின் ஊடாக 25.02.2025 சுவிசு நாடு சென்று 03.03.2025 திங்கள் ஜெனீவா சென்றடைகின்றது.
ஓர் இனத்தின் வலிகள் அனைத்து வழிகளிலும் சர்வதேசம் வரையும், இனத்தின் எதிர்காலத்தின் கைகளில் காலம் தந்திருக்கின்றன. நம்பிக்கையோடு பயணிப்போம்.