
சூடானில் ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஆபிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நிர்வாகம் என்பது இல்லை. சூடானின் ஒயிட் நைல் மாகாணத்தின் அல்-கிடைனா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சி படையினர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தாக்குதல் தொடர்பாக சட்ட வல்லுநர் குழு கூறியதாவது:
சூடானில் நடந்த மோதலின் போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட மனித உரிமை மீறல்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஆர்.எஸ்.எப்., கிளர்ச்சிப்படை, நிராயுதபாணியான பொதுமக்களைத் தாக்கி கொன்று குவிக்கிறது. இந்த தாக்குதலில் மரண தண்டனை, கடத்தல் மற்றும் சொத்து சூறையாடல் ஆகியவற்றை நடத்தி வருகிறது.என்று கூறினர்.