பிரான்சில் நாளைமுதல் ஒன்பது நாட்கள் எழுச்சி பெறும் வன்னி மயில் 2025 நிகழ்வு!

0
120

எமது மொழியில், எமது கலைகளில், எமது பண்பாட்டில் எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும், நேசமும் தேசியப்பற்றுணர்வாகப் பரிணாபம் பெறுகின்றன. தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து…..

16.02.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.03.2025 வரை ஒன்பது நாட்கள் எழுச்சி பெறும் “வன்னிமயில்” நடன நிகழ்வில் பாலர் பிரிவு- முதல் கீழ்ப்பிரிவு, நடுவண் பிரிவு, அதிமேற்பிரிவு, அதிஅதி மேற்பிரிவு,சிறப்புப் பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 1000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றுகின்றனர்.

நாளை 16 ஆம் நாள் முதல் 22 ஆம் நாள் வரை 95 ஆவது மாவட்டத்தில் உள்ள Le Thillay மண்டபத்திலும்

01.03./ 02.03.(சனி, ஞாயிற ஆகிய இரு தினங்களும் 93 ஆவது மாவட்டத்தில் உள்ள AULNAY SOUS BOIS – PIERRE SCOHY- மண்டபத்தில் நடைபெறுவுள்ளது.

எமது பிஞ்சு நெஞ்சங்களில் பஞ்சாய் இடம்பிடித்திருக்கும் எம்தேசப்பாடல்களும், அதற்கு அவர்கள் உயிர் கொடுத்து வடம்பிடித்து நிற்கும் வடிவையும் காணும் பெரும் பேறாகவே இந்நிகழ்வு அமைகின்றது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் போட்டியாளர்களினதும் அவர்களை பெற்றெடுத்த உன்னத பெற்றோர்களுக்குமே இந்தப்பெருமை சேர்கின்றது. இதனைப் பல சோதனைக ளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் அர்ப்பணிப்போடு நடாத்திவரும் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினரும் பெருமைக்குரியவர்களே!
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here