
யாழ் நல்லூர் தியாக தீபம் நினைவாலயத்திலும் சிறிலங்காவின் சுதந்திர நாளை புறக்கணித்து கரிநாளாகக் கொண்டு கறுப்புக்கொடி ஏந்தி எதிர் போராட்டம் இடம்பெற்றது.
இன்று காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.

