யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில் தமிழின அழிப்பு கண்காட்சி!

0
48

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளை திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதத்தின் 77 ஆவது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.

இது சிங்களத்திற்குரியதே தவிர தமிழருக்கானதல்ல . உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாக 77ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் போராடி வரும் எமக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் வழங்காமல் தமிழ் மக்களை இரண்டாம் தரமக்களாக இன்றுவரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் சிறிலங்கா அரசின் சுதந்திரதினத்தை வலிகளுடனும் வேதனைகளுடனும் ஆறாத காயங்களுடனும் வாழும் ஈழத்தமிழராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக ஓவியர் புகழேந்தி ஐயாவின் தமிழின கண்காட்சி சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டது.

தமிழின கண்காட்சியை பார்வையிட்ட வேற்றின மக்கள் தமது ஆதங்கத்தையும், இரக்கத்தையும் எம்மோடு பகிர்ந்துகொண்டனர்.அத்தோடு யேர்மன் மொழியில் தமிழர்களின் கரிநாளை பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் பிரித்தாணியா தூதரகத்திற்கு மனுவும் கையளிக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு,தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம் .

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here