
“எங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போது எமக்கு ஏது சுதந்திரம்” என்று வடக்கு,கிழக்கு வாழ் தமிழீழதேச மக்கள் சிங்கள சிறீலங்கா தேசத்தின் சுதந்திரநாளை துயரம் தந்த கரிநாளாக நினைவுகூரும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
பிரான்சில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து நாமும் குரல் கொடுப்போம் வாரீர் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
