
ஆசிரியர்களின் கற்பித்தலை இலகுவாக்கும் நோக்கோடு, மாணவர்களைக் கவரும் வகையில் கற்பித்தலை மேற்கொள்ளும் வகையிலான அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான பட்டறை ஒன்று பிரான்சு தமிழ்சோலைத் தலைமைப்பணியகத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியக விரிவுரை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற குறித்த பட்டறையை, டென்மார்க் நாட்டில் இருந்து வருகை தந்த வளவாளர்-
கதிரேசர்பிள்ளை ஆதவன்
(முன்னாள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்,
நாடக ஆசிரியர், எழுத்தாளர்) அவர்கள் மிகச் சிறப்பாக ஆற்றுகைப்படுத்தியிருந்தார்.

இப்பட்டறையில் தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதற்கான எண்ணமும் ஒழுங்கமைப்பும்,
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

