ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரைவயினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது.
கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணை அணுசரனை வழங்கி நிறைவேற்றிய தீர்மானம், இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய எதிர்பார்ப்பதாக அந்நாட்டுக்கான வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் காட்டி வரும் சிரத்தை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்வெயார் மூன்று நாள் இலங்கை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது அரச தரப்பு, எதிர்த்தரப்பு மற்றும் பல்வேறு தரப்புக்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள பிரிட்டன் அமைச்சர் வட பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள அரச தைப்பொங்கல் விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாடு ஒன்றில் உரையாற்றவுள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.